கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம்

🕔 November 27, 2015

Accident - 0967
– க. கிஷாந்தன் –

நுவரெலியா – பதுளை பிரதான வீதியிலுள்ள ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது.

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு குடைசாய்ந்தது.

லொறியில் சாரதியுடன், உதவியாளர் ஒருவரும் பயணித்திருந்தார். விபத்தின்போது உதவியாளர் படுகாயங்குள்கு உள்ளான நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

லொறியை வேகமாக செலுத்தியதால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.Accident - 097

Comments

புதிது பேஸ்புக் பக்கம்