பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது

🕔 November 27, 2015
President - CHOGM - 0978பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மொல்டாவில் ஆரம்பமானது.

பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும், இலங்கை ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களை, தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அவரின் பாரியாரும் வரவேற்றனர்.

அத்துடன், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவும் வரவேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தார்.

இந் நிகழ்வில், இங்கிலாந்தின் எலிசபத் மகாராணியும் கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்