சியாம் கொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஆறுபேருக்கு மரண தண்டனை

🕔 November 27, 2015

Siyam murder - 012
ம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பினை வழங்கியது.

குறித்த வழங்கில் குற்றவாளிகளாக வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ரவிந்து குணவர்தன மற்றும் ஏனைய நால்வர் அடங்கலாக ஆறுபேரை நீதிமன்றம் இனங்கண்டமையினை அடுத்து, இந்தத் தீர்ப்பு வழங்க்பட்டது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, இந்திக்க பமுனுசிங்க, காமினி சரத்சந்திர, ஆனந்த பத்திரனகே சஞ்சீவ, ரஞ்கன திஸாநாயக்க மற்றும் ரவிந்து குணவர்தன ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாவர்.

2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் 2013ம் ஆண் மே மாதம் 23ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொஹமட் பவுஸ்டீன் முதலீப், கம்மத தடயக்கார கொரலகே கிருஸாந்த விஸ்வராஜ் ஆகியோருடன் இணைந்து கொலை திட்டமிடல்ஈ கொலை செய்தல் உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய, குசலா சரோஜனினி வீரவர்தன மற்றும் அமேந்திர செனவிரட்ன ஆகியோர் இந்த வழக்கை விசாரணை செய்தனர்.

ஒரு வருட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்