தந்தை கொலை; 15 வயது மகன் கைது

🕔 November 27, 2015

Muder - 014
– க. கிஷாந்தன் –

துளை மாவட்டம் ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தனது தந்தையை தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக, ஹாலிஎல பொலிஸார் கூறினார்.

குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் 39 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்