சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது

🕔 July 28, 2021

வெள்ளவத்தையில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்து 07 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஆண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 33 வயதான பெண் 02 வருடங்களுக்கு முன்னர், தற்போது பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைத்தளம் வழியாக காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்ததை அடுத்து, குறித்த பெண்ணின் அந்தரங்கப் படங்களை வெளியிடப் போவதாக முன்னாள் காதலர் அச்சுறுத்தியுள்ளதோடு, அவற்றினை வெளியிடாமலிருக்க 1.4 மில்லியன் ரூபாவை கப்பமாகக் கோரியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட குறித்த பெண், சந்தேக நபரால் அனுப்பப்பட்ட இருவரிடம் முதற்கட்டமாக 07 லட்சம் ரூபாவை ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியிலேயே குறித்த கப்பத்தைப் பெற வந்த நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பிரிட்டனில் வசிக்கும் பிரதான சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்