அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம்

🕔 November 27, 2015

Mansoor -097– முன்ஸிப் –

ம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியமிக்கபட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தினூடாகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராத் தெரிவானார்.

அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற மூவரில், ஏற்கனவே பைசால் காசிம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் பிரதியமைச்சர் பதவிகளை வகித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, தற்போது மு.காங்கிரசின் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஐ.எம். மன்சூர், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்