மஹிந்த, ரணில் உணவுண்ணும் படங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம்

🕔 July 10, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒன்றாக உணவுண்ணும் போது பதிவு செய்யப்பட்ட படங்கள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்துள்ளது.

குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானமையை அடுத்து, அவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் வெளியாகின.

இந்த நிலையிலேயே வியாழக்கிமையன்று இரவு நடந்த மேற்படி விருந்துபசார நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எவ்விதமான ரகசிய அரசியல் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் – கொழும்பு 03, ஐந்தாவது ஒழுங்கையில் உள்ள நபர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட படங்களே சமூக வலைத்தளங்களில் வெளியானதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது குறிப்பாக அவர்கள் அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் பிரதமரின் கீழ் வரும் நிறுவனங்களை மாற்றுவது குறித்த அரசியல் பற்றி ஒருபோதும் விவாதிக்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்