மண்சரிவில் வீடுகள் சேதம், பாதிக்கப்பட்டோர் ஆலயத்தில் தஞ்சம்

🕔 November 25, 2015

Houses - 026
– க. கிஷாந்தன் –

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவர்ஸ் லீப் தோட்டத்தில், இன்று புதன்கிழமை காலை 05 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 04 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த வீட்டில் வசித்த 24 பேர் தற்போது தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. பாதிக்கபட்ட லயன் தொகுதி ஏற்கனவே வெடிப்புற்று காணப்பட்ட போதிலும், இதுகுறித்து தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு 40 வருடங்களுக்கு முன்பு இக்குடியிருப்பானது, மாடுகளை அடைக்கும் இடமாக இருந்ததாகவும், தோட்டத்தில் வீடுகள் இல்லாத காரணத்தினால் இவை தமக்கு வழங்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டோர்  கூறுகின்றனர். Houses - 024Houses - 023

Comments

புதிது பேஸ்புக் பக்கம்