மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம்

🕔 June 30, 2021

– சர்ஜுன் லாபீர் –

ருதமுனை பிரதேசத்தை நாளை முதலாம் திகதி முதல் முழுமையாக மூடுவதற்கு (Lockdown ) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர் மட்டக்.கூட்டத்தில் இ்ன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அந்தப் பிரதேசத்தை மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாளை 01ம் திகதி இரவு முதல் மருதமுனை பிரதேசத்துக்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட் பிரவேசிப்பதும் வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்படுகிறது.

இன்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி உட்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்