பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார்

🕔 June 29, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் வகிக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்படவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்