அதிக விலைக்கு அரிசி விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

🕔 June 29, 2021

நிர்ணய விலைக்கும் அதிகமாக அரிசியை விற்கும் வர்த்தகர்களுக்கு 01 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இதற்கான தீர்மானம் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்போருக்கான அபராதமாக தற்போது 2500 ரூபா விதிக்கப்படுகிறது.

சந்தையில் அரிசி தொடர்ந்தும் அதிக விலைக்கு விற்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்