சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்

🕔 June 25, 2021

சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2021/22 பெரும்போக நெற் செய்கைக்காக 05 லட்சம் ஹெக்டயர்களுக்குத் தேவையான சேதனப் பசளையினை, அரசாங்கத்திற்குத் சொந்தமான பசளைக் கம்பனிகள் மூலம் இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 06 லட்சம் ஹெக்டயர் விவசாய காணிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பெரும் போகத்திலிருந்து, சேதன விவசாயத்துக்கு நாடு மாற வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்