மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

🕔 June 24, 2021

கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைவாசம் அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அவர் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் துமிந்த சில்வா மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

துமிந்த சில்வா சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலப்பகுதியில், அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்தது.

இந்தப் பின்னணியிலேயே பொசன் தினைத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் மொத்தமாக 94 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் 16 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாவர்.

ஏனைய 78 பேரில் சிறு குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களும் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்