துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல்

🕔 June 22, 2021

பர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர், நேற்று இரவு அமைச்சின் மட்டக்களபப்பு வீட்டின் முன்பாக வைத்து, நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலரை இன்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்தபோது, அவரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட மெய் பாதுகாவலருக்கும் உயிரழந்தவருக்கும் இடையில் சில நாட்களாக தகராறு நிலவிய சூழ்நிலையிலேயே இச்சம்பவம் நடந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை சம்பவம் நடந்த வேளை ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கொழும்பில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்