லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது

🕔 June 21, 2021

னிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், லிந்துல – தலவாக்கல நகரசபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மேலும் 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தலவாக்கல நகரிலுள்ள விருந்து மண்டபத்தில் கூட்டமொன்றை நேற்று நடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தினுள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காகக் கைது செய்யப்பட்ட 844 பேரில் இவர்களும் அடங்குகின்றனர்.

2020 ஒக்டோபர் 30ஆம் திகதி தொடக்கம் மொத்தம் 41,518 சந்தேக நபர்கள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்