கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம்

🕔 June 21, 2021

நாட்டில் இதுவரை 24 லட்சத்து 72 ஆயிரத்து 807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 8,574 பேருக்கு போடப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 252 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதுவரை 03 லட்சத்து 72 ஆயிரத்து 158 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதுவரை 01 லட்சத்து 10 ஆயிரத்து 453 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கும் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்