பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு

🕔 June 18, 2021

டைமுறையிலுள்ள பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, ராணுத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பின்னர் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு பயணத்தடை மீண்டும் அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு நடைமுறைக்கு வரும் பயணத் தடை இம்மாதம் 25ஆம் திகதி காலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயணத்தடை கடந்த 14ஆம் திகதி தளர்த்தப்படும் என ராணுவத் தளபதி அறிவித்திருந்த போதும், பின்னர் 21ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்