ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த

🕔 November 25, 2015

Mahinda - 093னாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே – தான் விஹாரைகளுக்கு செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி – தெல்லம்புர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாடு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நல்லாட்சி அரசாங்கம் தன்னை பழிவாங்கும் நோக்கில் உள ரீதியாக பாதிப்படையச் செய்யும் வகையில் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது.

இதனால் நான் மிகவும் மனவேதனைக்கும், மன அழுத்தத்துக்கும் உள்ளாகி இருக்கிறேன். இந்த அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே, விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறேன்.

அத்துடன் நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம், குரோத அரசியலை முன்னெடுத்து வருகிறது. எனவே, குரோத அரசியலை கைவிட்டு, மக்களுக்கு நலன்களை வழங்கும் வகையில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.f

Comments

புதிது பேஸ்புக் பக்கம்