பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது

🕔 June 10, 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை நேற்று புதன்கிழமை வவுனியா சாந்தசோலை பகுதியில் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை வவுனியாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முககவசம் அணியாமல் சென்ற சந்தேக நபரிடம் – பொதுச் சுகாதார பரிசோதகர் அதுபற்றி கேட்டபோதே, அவர் தாக்கியதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பொதுச் சுகாதார பரிசோதகர், வவுனியா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகின்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் அடுலுகம பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரின் முகத்தில் துப்பிய நபர் ஒருவருக்கு, நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தமையினை இதன்போது பொலிஸ் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்