பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது
பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை நபரொருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது.
வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், மக்ரோங்கின் கன்னத்தில் அறைந்தார்.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்து, ஜனாதிபதியை பின்நோக்கி இழுத்தனர்.
இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நபர்ஜனாதிபதி மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடியோ