ஐக்கிய மக்கள் சக்தி சீனாவுக்கு எதிரானதல்ல: நாடாளுமன்றில் தெரிவிப்பு

🕔 June 8, 2021

க்கிய மக்கள் சக்தி – சீனாவுக்கு எதிரானது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

தமது கட்சி இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதே தவிர சீனாவுக்கு எதிரானதல்ல எனவும் அவர் கூறினார்.

“நாங்கள் சில நாடுகளுக்கு எதிரானவர்கள் என்று சிலர் கருதுகிறார்கள். சீன அரசாங்கம், இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு நாம் எதிரானவர்கள் அல்லர். நாங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானவர்கள். ஏனென்றால், இலங்கை அரசாங்கமே நாட்டைக் காட்டிக் கொடுக்கிறது, ”என்றார்.

எந்த நாட்டுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டாலும் இலங்கைக்கு சாதகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

உள்ளுர் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக ‘செலன்டிவா இன்வெஸ்ற்மென்ற்ஸ் லிமிடர் (Selendiva Investments Limited) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்