போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிஐடி விசேட குழு நியமனம்
சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கண்காணிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறான போலியான செய்திகளினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.