ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன?

🕔 June 4, 2021

னாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசுக்கு உரித்தான பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணைய வழித் தாக்குதல் நடத்தப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ‘சேர்ட்’ (CERT) எனப்படும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது.

மேற்கூறப்பட்ட அரசுக்கு உரித்தான எவ்வித  இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான 06 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் முன்னதாக அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு இணையவழி  தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தது என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.

இதேவேளை போலியான தகவலை பகிர்ந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவை, பொலிஸ் கணினிக் குற்றப்பிரிவுக்கு அழைப்பித்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவிதுள்ளார் என, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்