இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின் பதவியிழக்கிறார்

🕔 June 3, 2021

ஸ்ரேலில் அனைத்து எதிர் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு வந்துள்ளன.

இதனால் இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 02 வருடங்களில் 04 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நான்கு முறையும் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் லிக்குட் கட்சி வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் அங்கு திடீர் திருப்பமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேல் ஜனாதிபதி ரூவன் ரிவ்லினின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கூடியது.

இதில் மூத்த அரசியல்வாதியும், இஸ்ரேலின் முக்கிய குடும்பத்தின் வாரிசுமான ஐசக் ஹெர்சாக் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

60 வயதான ஐசக் ஹெர்சாக் இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் 2013 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை சைம் ஹெர்சாக் இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி ஆவார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு சைம் ஹெர்சாக் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதராக இருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்