பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி

🕔 May 31, 2021

நாட்டில் ஜுன் மாதம் 07ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயணக் கட்டுப்பாடு குறித்து எதிர்வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும், ஆனால் இன்று காலை வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மே 21 முதல் 28ஆம் திகதி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்னவு செய்யும் பொருட்டு 25 ஆம் தேதி பயணத் தடை தளர்த்தப்பட்டது.

அதன் பின்னர் பயணத் தடை ஜூன் 7ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

மே 31 மற்றும் ஜூன் 04 ஆகிய திகதிகளில் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவித்திருந்தாலும், ஜூன் 07 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு தடையின்றி தொடரும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்