கொள்ளை வியாபாரிகள் தொடர்பில் 1977 க்கு அறிவிக்கவும்

🕔 November 24, 2015

1977 - 02ரவு – செலவுத் திட்டத்தில் விலை குறைக்கப்பட்ட அத்தியவசியப் பொருட்களை, அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு, நுகர்வோர் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது.

அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும், இதுவரை வரவு – செலவுத் திட்ட சலுகைகள் நுகர்வோரைச் சென்றடையவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை, நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன் அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது நுகர்வோர் அதிகார சபைக்கு உடனடியாக தகவல் வழங்குமாறும் அறுவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்