தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்: பொலிஸ் மா அதிபர் உத்தரவு

🕔 May 29, 2021

னிமைப்படுத்தல் சட்டத்தை அமல்படுத்தும்போது பொதுமக்களை துன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ கூடாது என்று பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஏதேனும் சம்பவம் நடந்தால் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்