நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு
– க. கிஷாந்தன் –
நான்கு அடி நீளமான சிறுத்தையொன்றினை நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை மாலை இறந்த நிலையில் மீட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ‘உலக முடிவு’ எனப்படும் இடமான டயகம ஹோட்டன் சமவெளி பகுதியை அண்மித்த தேயிலை தோட்டப்பகுதியில், மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 03 வயது நிரம்பிய மேற்படி சிறுத்தையானதுது 2.5 அடி உயரமும் 4 அடி நீளமும் கொண்டதென வன ஜீவ திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டப்பகுதியில் வேட்டையாட வைத்திருந்த கம்பியில் சிக்குண்ட நிலையில், சிறுத்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுத்தையை நுவரெலியா பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள காரியாலயத்தில் ஒப்படைக்கவுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.