இஸ்ரேல் – பலஸ்தீன் சண்டை முடிவுக்கு வந்தது: 11 நாள் அவலத்துக்கு ஓய்வு

🕔 May 21, 2021

ஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சண்டை நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை நடைபெற்ற மோதலால் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் காசாவை சேர்ந்தவர்கள்

மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து “இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி” என கோஷம் எழுப்பினர்.

இந்த சண்டையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு என இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டன.

சண்டை நிறுத்தம், அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கான ‘ஓர் உண்மையான வாய்ப்பை’ வழங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வியாழனன்று காசாவின் வடக்கு பகுதியில் ஹமாஸ் குழுவின் கட்டடங்கள் மீது இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை தொடுத்தது. ஹமாஸ் குழுவும் பதில் தாக்குதல்களை தொடுத்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் – பாலத்தீன பதற்றம் இருவாரங்களாக நீடித்த வந்த நிலையில், முஸ்லிம் மற்றும் யூதர்கள் இருவரும் புனித தலமாக கருதும் இடத்திலிருந்து மே மாதம் 10ஆம் திகதியன்று சண்டை தொடங்கியது.

அந்த இடத்திலிருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை ஹமாஸ் எச்சரித்து ஏவுகணை தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடங்கியது.

காசாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 232 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் கொல்லப்பட்டவர்களில் 150 பேர் ஹமாஸ் குழுவை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. ஆனால் ஹமாஸ் குழுவினர் தங்களை குழுவை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை வெளியிடவில்லை.

இஸ்ரேலை பொறுத்தவரை குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என, இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்