துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார்.
இதன்படி, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சரத்துக்கள் திருத்தப்படுமாக இருந்தால், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்ற தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.