இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 192 பேர் பலி; 40 ஆயிரம் பேர் இடம்பெயர்வு: 08 நாள் நிலைவரம்

🕔 May 17, 2021
இஸ்ரேல் விமானத் தாக்குதலால் காஸாவில் நிர்மூலமாக்கப்பட்ட ஒரு பகுதி

ஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் கடந்த 08 நாட்களில் காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேம் பகுதிகளில் மட்டும் 209 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்தப் பகுதிகளில் 5508 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் இன்று 17ஆம் திகதி வரை இந்த நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

காஸாவில் 40ஆயிம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 500க்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 58 பேர் சிறுவர்களாவர். அதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல்களில் இஸ்ரேலில் 10 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் சிறுவர்கள். மேலும் 564 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.

Comments