நாடு முழுவதும் மூன்று வகையான பயணக் கட்டுப்பாடுகள்; இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரை அமுல்

🕔 May 12, 2021

கொவிட் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் மூன்று வகையான முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

அவை வருமாறு;

01) இன்று 12ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் நாளை 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது (இது ஊடரங்கு சடத்தை ஒத்தது). அத்தியவசியப் போக்குவரத்துகளுக்கு இந்த பயணத்தடை பொருந்தாது.

02) நாளை 13ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில், மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் பயணத்தடை (இதுவும் ஊடரங்கை ஒத்தது) . அத்தியவசியத் தேவையின் பொருட்டும், கொவிட் தடுப்பு மருந்து ஏற்றுவதற்காகவும் பயணிப்போருக்கும் இந்தப் பயணத்தடை பொருந்தாது.

03) அடையாள எண்களின் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் நாளை (13) முதல் மே 31ஆம் திகதி வரை, தினசரி நடமாட்டங்கள் அனுமதிக்கப்படும்.

அதன்படி ஒற்றைப்படை நாட்களில் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கமாக 1,3,5,7,9 ஆகியவற்றைக் கொண்டவர்கள், அத்தியவசியத் தேவைகளின் பொருட்டு வெளியே நடமாட அனுமதிக்கப்படுவர்.

ஏனைய நாட்களில் தேசிய அடையாள அட்டையில் 0,2,4,6,8 ஆகியவற்றை கடைசி இலக்கமாக கொண்டவர்கள் அத்தியவசியத் தேவையின் பொருட்டு வெளியேறலாம்.

எவ்வாறாயினும் பயணம் முற்றிலும் தடைசெய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு (14 முதல் 16ஆம் திகதி வரை) இது பொருந்தாது.

அத்தியாவசிய சேவைகளின் பொருட்டும், அலுவலக வேலைக்கு பயணிப்பவர்களுக்கும் அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டு வெளியேறும் கட்டுப்பாடுகள் பொருந்தாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்