கொவிட் நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்க திட்டம்: ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

🕔 May 8, 2021

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஔடத உற்பத்திகள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டம் ஒன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் உள்ளனர். குறிப்பாக கடுமையான அறிகுறிகள் இல்லாத நோயாளிகள். அவர்களுக்கு வைத்தியசாலை வசதிகளை வழங்குவதற்காக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருத்தமான தடுப்பூசி குறித்தும் பரிசீலித்து வருகிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்