சிறையில் தற்கொலைக்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சி: சிங்கள ஊடகம் தகவல்

🕔 May 7, 2021

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என, சிங்கள ஊடகம் லங்கா சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைத்தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்க கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பேசப்படுகிறது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் பொது மன்னிப்புக் கோரும் ஆவணங்களில் ரஞ்சன் ராமநாயக்க கைழுத்திட்டுள்ள போதும், அந்த ஆவணங்கள் இன்னும் ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீதித்துறை அவமதிப்புக் குற்றத்துக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்