யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு

🕔 April 10, 2021

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜரானார்.

இதற்கமைய, 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

குறித்த வழக்கு, எதிர்வரும் ஜுன் மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முதல் மன்னிப்பு

இதேவேளை மணிவண்ணன் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசியதாகவும், அவருக்கு முதல் மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ஒத்துக் கொண்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்திருந்தார்.

மணிவண்ணனை முதல்வராக்குவதற்கு தமது கட்சியான ஈபிடிபி ஆதரவு வழங்கியதாகவும், யாழ்ப்பாண மாநகர சபையின் செயற்பாட்டை சிக்கலின்றி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் அமைச்சர் தேவனந்தா மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமையினால் மணிவண்ணனுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சடத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட மாட்டாது எனவும், சாதாரண சடத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றின் ஊடாக பிணை வழங்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தா தெரிவித்திருந்தார்.

தொடர்பான செய்தி: புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்