சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது

🕔 April 8, 2021

ஹ்ரான் பின்பற்றிய அடிப்படைவாத கருத்துக்களை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் ஒலுவில் பகுதியை சேர்ந்த 30 மற்றும் 39 வயதுடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களை இலக்கு வைத்து இந்நபர்கள் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வகுப்பானது மாணவர்களது விருப்பமின்றி 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இந்த போதனையின் போது பல்வேறு உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்