‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

🕔 November 20, 2015

France - 013யங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார்.

இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி, கட்டிப் பிடித்து கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது.

இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த இளைஞர் பேசும் போது;

“நான் ஓர் இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான் யாரையும் கொன்றதில்லை” எனத் தெரிவித்தார்.

“எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்தால், அவன் தீவிரவாதிதான். அதில் மாற்றமில்லை.

ஆனால், ஓர் இஸ்லாமியர் அதைச் செய்யமாட்டார். அதற்கு எங்கள் மதம் தடைவித்துள்ளது” என்று அந்த இளைஞர், அங்கிருந்த மக்களிடம் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்