நாடாளுமன்றில் பெப்ரவரி மாதம் மிகவும் செயற் திறனாக இயங்கிய முதல் ஐவர் பட்டியல் வெளியீடு

🕔 April 2, 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா இரண்டு உறுப்பினர்கள், பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மிகவும் செயற்திறனுடன் இயங்கிய ஐவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

மந்திரி டொட் எல்கே (Manthri.lk) நடத்திய ஆய்வின்படி, இவ்வருடம் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மிகவும் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாகச் செயற்பட்ட முதல் ஐவரில் முதலிடத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திக பத்திரண பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை பொதுஜன பெரமுனவின் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பெற்றுள்ளார்.

மூன்றாமிடத்தை எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் பிடித்துள்ளார்.

நாலாவதாக எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன உறுப்பினர் வீரசுமண வீரசிங்க இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றள்ளார்.

பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையிலான நாடாளுமன்ற நடவடிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மந்திரி டொட் எல்கே (Manthri.lk) கடந்த ஜனவரி மாதம் நடத்திய ஆய்வின்படி, மிகச் செயற்தினுள்ள முதல் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் முதலிடத்தை ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸாநாயக்க பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்