நல்லாட்சியர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்; சபையின் இன்று சமர்ப்பிப்பு

🕔 November 20, 2015

Budjet - 012புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வரவு – செலவுத் திட்டத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் என்று வர்ணிக்கப்படும், புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் என்பதால், இது தொடர்பில் பொதுமக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, இந்த வரவு – செலவுத் திட்டத்தினூடாக அரசாங்கமும் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவைளும் உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்