நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல்

🕔 March 18, 2021

நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளைக் கையாள முழு நாட்டிலும் 378 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“வளர்ந்த நாடுகளில் 10 லட்சம் மக்களுக்கு 200 நீதிபதிகள் உள்ளனர். நடுத்தர வருமான நாடுகளில் 10 லட்சம் மக்களுக்கு 65 முதல் 70 நீதிபதிகள் உள்ளனர்.

தற்போதைய சட்ட அமைப்பின்படி ஒரு வழக்கை முடிக்க 10 ஆண்டுகள் செல்லும்.

மாவட்ட நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 5000 வழக்குகள் நிலுவைகளில் உள்ளன, அவை 20ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு முடிவும் இல்லாமல் உள்ளன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்