200 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம்; ஜனாதிபதி ஆணைக்குழு முன், நாமல் ஆஜர்

🕔 November 19, 2015

Namal Rajapakse - 01முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சிக்கு 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகானான நாமல் ராஜபக்ஷவிடமும் சாட்சிகளை பதிவு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிணங்க, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வருகை தந்திருந்தார்.

இதன்போது, சட்டத்தரணிகளால் அறிக்கை சமர்பிக்கப்படாததன் காரணமாக ஆணைக்குழுவின் இன்றைய நாளுக்கான விசாரணைகள் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்