சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து

🕔 March 13, 2021

புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்துள்ளார்.

“இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் இருக்கின்றது” எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை புர்கா என்பது மதரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த முஜிபுர் ரகுமான்;

“அதுகுறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்கமுடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப்போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது.

அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணியவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மதரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப்போக்குடைய சிந்தனையாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்