விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு

🕔 November 19, 2015
Mahinda Rajapaksa - 011சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பணம் செலுத்தாமல் விளம்பரம் மேற்கொண்ட குற்றச்சாடடு தொடர்பில், இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையினாலேயே, இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில், தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதுவரை 04 தடவை மஹிந்த ராஜபக்ஷ விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் அவருடைய சட்டத்தரணிகள் சமுகமளிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்