ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டுச் சேராது என, அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவருடன் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் வேட்டைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் – கட்சி மாநாட்டில் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.