மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம்

🕔 February 18, 2021

த்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, முதலாவது ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி. தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன ஆகியோரும் இரண்டாவது ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, நிமல் பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபந்திகே ஆகியோர் நியதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஸாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2016ஆம் ஆண்டு மேற்படி பிணைமுடி மோசடி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் 07 பேரை விசாரிக்கப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்