பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

🕔 November 17, 2015

Accident - 0125
– க. கிஷாந்தன்-

ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா வனராஜா பிரதேச பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் படுங்காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியா்கள் தெரிவித்தனா்.

முச்சக்கரவண்டியின் வேகத்தைகட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.Accident - 0126Accident - 0124

Comments

புதிது பேஸ்புக் பக்கம்