பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்

🕔 February 16, 2021

ல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் ஆணையாளருக்கு பரிந்துரை விடுத்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் மற்றும் பல்மருத்துவ பீடங்களில் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில் 5,800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

அத்துடன் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் தடுப்பூசியை வழங்குமாறு சுகாதார அமைச்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தில் 08 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை என பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவின் பிரதான வைத்தியர் பி.எச்.எம். சமரக்கொடி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்