எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரில், இளைய தலைமுறையினரின் தொகை அதிகரிப்பு

🕔 November 16, 2015

AIDS - 01யிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 161 பேர் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்ட 52 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளைய தலைமுறையினரிடையே எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடத்தின் இதே காலாண்டு பகுதியில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட 60 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்ததாக பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.

எச்.ஐ.வி. தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அது குறித்த பரிசோதனைகளை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்