மலைபோல் உயரும் மரக்கறி விலைகள்
– க.கிஷாந்தன் –
நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் மழையின் காரணமாக, குறித்த மரக்கறிகள் அழுகிப் போகும் நிலை ஏற்படலாம் என, இப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறித்த காலநிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக, தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சாதாரணமாக, இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை குறைவடைவதே வழமையாகும். ஆனால். தற்போது மரக்கறி விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளமையினால், மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
மலையகத்தில் தற்போது மரக்கறி வகைகளின் விலை;
லீக்ஸ் ஒரு கிலோ விலை – 160 ரூபா
பாவக்காய் ஒரு கிலோ விலை – 200 ரூபா
வெண்டிக்காய் ஒரு கிலோ விலை – 120 ரூபா
புண்டலங்காய் ஒரு கிலோ விலை – 120 ரூபா
தக்காளி ஒரு கிலோ விலை – 120 ரூபா
கோவா ஒரு கிலோ விலை – 140 ரூபா
கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 320 ரூபா
கத்திரிக்காய் ஒரு கிலோ விலை – 120 ரூபா
நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 150 ரூபா
போஞ்சி ஒரு கிலோ விலை – 240 ரூபா
பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 1000 ரூபா
கரட் ஒரு கிலோ விலை – 180 ரூபாவிலிருந்து 200 ரூபா வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.