“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி

🕔 November 14, 2015

France attack - 014
“இ
து உங்கள் ஜனாதிபதி ஹொலாந்தேயின் தவறு. சிரியாவில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது” என்று கூறியவாறு, பிரான்ஸ் தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தாக்குதலை நேரில் கண்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக தனது நாட்டுப் படைகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பாரிஸில் உள்ள பட்லாகா திரையரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

குறித்த திரை அரங்கில் நடந்த தாக்குதல் குறித்து, அங்கிருந்த வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் ஜொனாசக் கூறும்போது,”எனக்கு அந்த தீவிரவாதிகள் பேசியது தெளிவாகக் கேட்டது. அவர்கள் ‘இது உங்கள் ஜனாதிபதி  ஹொலாந்தேயின் தவறு. அவர் சிரிய பிரச்சினையில் தலையிட்டிருக்கக் கூடாது என்று சத்தமிட்டனர்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஈராக் குறித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் பேசியதாக, மேற்படி வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் ஜொனாசக் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்